கடலூர் மாவட்டம் வடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட என்எல்சி தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
பணி நாட்களை மீண்டும் 26 ஆக உயர்த்தித் தருமாறு கோரி கடந்த 20 நாட்களுக்கு மேலாக என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சி சார்பில் சென்னை கும்பகோணம் சாலையில் உள்ள வடலூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத காரணத்தால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.