\

மெரினாவில் போராட்டம் நடத்தத் தடை: காவல்துறை அறிவிப்பு

மெரினாவில் போராட்டம் நடத்தத் தடை: காவல்துறை அறிவிப்பு
Published on

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்காக சமீபத்தில் மெரினா கடற்கரையில் பல லட்ச மக்கள் கூடி அறவழியில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் கடைசிநாளான கடந்த திங்கள் கிழமை வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில் காவல்துறை சென்னை மெரினாவில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போராட்டம் நடத்த தடை விதித்துள்ளது. மேலும், சென்னையின் முக்கிய இடங்களில் போராட்டம் நடத்த ஏற்கனவே தடை உள்ளதாகவும், பொழுது போக்கிற்காக மெரினாவுக்கு மக்கள் அதிக அளவில் வருகின்ற காரணத்தினாலும் மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com