கைவிட்ட காதல் கணவன்... தீக்குளிக்க தயாரான பெண்: போலீசார் செய்த மனிதநேய செயல்!

கைவிட்ட காதல் கணவன்... தீக்குளிக்க தயாரான பெண்: போலீசார் செய்த மனிதநேய செயல்!
கைவிட்ட காதல் கணவன்... தீக்குளிக்க தயாரான பெண்: போலீசார் செய்த மனிதநேய செயல்!

கணவனை தன்னோடு சேர்த்து வைக்ககோரி தற்கொலைக்கு முயன்ற பெண்ணிற்கு காவல்துறையினர் புத்திமதிக்கூறி செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பியுள்ள சம்பவம் தேனியில் நடந்துள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி செல்வி(26) என்பவரும், முன்னுரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் பெற்றோரின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யுவஸ்ரீ (3), புவனேஷ் (1.5) ஆகிய இரு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் செல்வியை பிரிந்து சென்ற கிருஷ்ணன் திரும்பி வரவில்லை எனத் தெரிகிறது.

இதனால் மனவேதனையுற்ற பாண்டி செல்வி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது அவரை சோதனை செய்த போது அவர் மண்ணெண்ணெய் பாட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரன் விசாரணை நடத்தினார். அப்போது ஒன்றரை வருடத்திற்கும் மேலாக கணவன் தன்னை பார்க்க வரவில்லை என்றும் இது குறித்து கணவனின் பெற்றோரும் தகவல் தெரிவிக்க மறுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகுந்த சிரமத்திற்கு இடையே வாழ்கை நடத்துவது வேதனையாக இருந்ததால் தற்கொலை செய்ய வந்ததாக அவர் தெரிவித்தார்.

இதனைக் கேட்ட சங்கரன் அவருக்கு புத்திமதி வழங்கி இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த காவல் துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். மேலும் அவரிடம் பயணத்திற்கான பணம் கூட இல்லாததை தெரிந்து கொண்ட காவல்துறையினர் அவருக்கு போதுமான பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com