காவல்நிலையம் எதிரே பெண்ணை தாக்கிய காவலர் கைது - தகாத உறவால் பிரச்னை
தென்காசி மாவட்டம் கடையத்தில் காவல்நிலையம் எதிரே பெண்ணை தாக்கிய காவலர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி கடையம் காவல் நிலையத்தில் இருந்து இடமாறுதல் பெற்று வீரவநல்லூரில் காவலராக பணிபுரிந்து வருகிறார். அவர் கடையத்தில் பணிபுரிந்தபோது, காவல் நிலையம் எதிரே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த முப்புடாதி சக்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பெண்ணிற்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்கு காவலர் தட்சிணாமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். எனினும் அதனை ஏற்காததால் ஆத்திரம் அடைந்த காவலர், காவல்நிலையம் எதிரே உள்ள முப்பிடாதியின் வீட்டிற்கு சென்று கத்தியால் தாக்கினார். இதில் தலை, கழுத்து பகுதியில் காயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே பெண்ணை தாக்கிய காவலர் தட்சிணாமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்தனர்.

