\
ஈ.சி.ஆர் சாலையில் கஞ்சா விற்பனை - வடமாநில இளைஞர் கைது

ஈ.சி.ஆர் சாலையில் கஞ்சா விற்பனை - வடமாநில இளைஞர் கைது

ஈ.சி.ஆர் சாலையில் கஞ்சா விற்பனை - வடமாநில இளைஞர் கைது
Published on

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 5 கிலோ கஞ்சாவுடன் வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் அருகே உள்ள முட்டுக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் முட்டுக்காடு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, அங்கு சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.

அவரிடம் விசாரணை செய்ததில் அவர் ஒடிசாவை சேர்ந்த தக்கர் குமார் தாஸ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர் காரப்பாக்கத்தில் தங்கி, கஞ்சா விற்பனை செய்து வந்ததுள்ளார். அவரது கூட்டாளி தலைமறைவாகியுள்ளார். அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com