\
கஞ்சா கடத்தல்: கொலை வழக்கில் சிக்கிய இம்தியாஸின் சகோதரி கைது

கஞ்சா கடத்தல்: கொலை வழக்கில் சிக்கிய இம்தியாஸின் சகோதரி கைது

கஞ்சா கடத்தல்: கொலை வழக்கில் சிக்கிய இம்தியாஸின் சகோதரி கைது
Published on: 

மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இம்தியாஸின் சகோதரி உள்பட மூவர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுனில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவ்வழியாக வந்த ஜீப்பை மறித்து சோதனையிட்டனர். அதில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் ஜீப்பில் இருந்த ரபியா பர்வீன் என்பவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவர் மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் சிறையில் உள்ள இம்தியாஸின் சகோதரி என்பது தெரியவந்தது.

கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப்பையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், கைதான மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com