கோயில் கூட்டத்தில் செல்போன் திருடிய பெண் - கையும், களவுமாக பிடித்த போலீஸ்

கோயில் கூட்டத்தில் செல்போன் திருடிய பெண் - கையும், களவுமாக பிடித்த போலீஸ்

கோயில் கூட்டத்தில் செல்போன் திருடிய பெண் - கையும், களவுமாக பிடித்த போலீஸ்
Published on

திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் கூட்ட நெரிசலில் செல்போன் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவான்மியூர் மருதீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனை பயன்படுத்தி கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், மற்றொரு பெண்ணின் கை பையை திறக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீஸார், பையை திறந்து செல்போனை திருடும்போது கையும் களவுமாக அப்பெண்ணை பிடித்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அந்த பெண் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் பானு சர்மு என்பதும் தெரியவந்தது. இந்த பெண் தொடர் திருட்டில் ஈடுபடுவது வழக்கம் என போலீசார் தெரிவித்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் போலீஸார், அவரிடமிருந்து 5 செல்போன்களை பறிமுதல் செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com