விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள் தற்போது டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மெரினாவில் போராட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதையடுத்து மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் பாதுகாப்பையும் மீறி கடலில் இறங்கி போராட முயன்ற 20 மாணவர்களை காவல்துறையினர் காலையில் கைது செய்தனர். இந்தநிலையில், மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குப் பின் இளைஞர்கள் ஒன்று கூடினர். கடற்கரை இணைப்பு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த முயன்ற அவர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.