தமிழ்நாடு
பெருங்குடி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி போராட்டம்: 75 பேர் கைது!
பெருங்குடி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி போராட்டம்: 75 பேர் கைது!
சென்னை பெருங்குடியில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பெருங்குடி அருகே அமைந்துள்ள சுங்கச்சாவடியால் அந்த சாலை வழியாக பணிக்கு செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி மாநகராட்சி எல்லைக்குள் சுங்கச்சாவடி அமைந்துள்ளது என்றும், இதனால் தங்கள் பணமும், நேரமும் வீணவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் சுங்கச்சாவடியால் ஆத்திரமடைந்த கந்தர் சேனை என்ற அமைப்பைச் சேர்ந்த 75 பேர், சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார், 75 பேரையும் கைது செய்தனர். அப்போது சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.