\
கொரோனா விழிப்புணர்வுக்காக வீதி நாடகம் நடத்தும் காவல்துறையினர்

கொரோனா விழிப்புணர்வுக்காக வீதி நாடகம் நடத்தும் காவல்துறையினர்

கொரோனா விழிப்புணர்வுக்காக வீதி நாடகம் நடத்தும் காவல்துறையினர்
Published on: 

மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதால் கொரோனோ வைரஸ் பரவும் அபாயம் குறித்து, மதுரையில் காவல்துறையினர் வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகத்தான், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசியத் தேவைக்காக செல்வதாகக் கூறி மக்கள் வெளியே ‌நடமாடுவது அதிகரித்து வருகிறது.

மதுரையில் இவ்வாறு தேவையின்றி வெளியே வருவோரை எச்சரிக்கும் விதமாக, காவல்துறையினர் வீதி நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்காவிட்டால், கொரோனா வைரஸ் பரவி விடும் என்றும், இதனால் மருத்துவர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் போன்றோரும் பாதிக்கப்படக்கூடும் என்றும், பொதுமக்கள் அதிகளவில் உயிரிழக்க நேரிடும் எனவும் அவர்கள் வீதி நாடகம் வாயிலாக உணர்த்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com