\
'எமதர்ம ராஜா' வேடமிட்டவர் உடன் சென்று வித்தியாசமாக விழிப்புணர்வூட்டும் காவல்துறை

'எமதர்ம ராஜா' வேடமிட்டவர் உடன் சென்று வித்தியாசமாக விழிப்புணர்வூட்டும் காவல்துறை

'எமதர்ம ராஜா' வேடமிட்டவர் உடன் சென்று வித்தியாசமாக விழிப்புணர்வூட்டும் காவல்துறை
Published on

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் எமன் வேடமிட்ட நபருடன் சென்ற காவல்துறையினர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையத்தில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகள் குறித்தும் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடைவீதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றிட வேண்டுமென வலியுறுத்திட, எமதர்மராஜா வேடமிட்ட நபரை அழைத்துச் சென்றனர். அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் ஏற்படும் பாதிப்புகளை எமதர்மராஜாவைப் போல பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com