\
’சாலையில் பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை’: காவல்துறை

’சாலையில் பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை’: காவல்துறை

’சாலையில் பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை’: காவல்துறை
Published on

சாலையில் பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

ஆயுத பூஜையை முன்னிட்டு, பெரும்பாலான பொதுமக்கள், கடைகள், நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பூஜைகள் செய்து திருஷ்டி பூசணிக்காய் உடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சாலைகளின் நடுவே திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்துவிட்டு செல்வதால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே பொதுமக்கள் சாலைகளில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம் எனவும் பாதுகாப்பான முறையில் பூஜைகளை செய்யுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. சாலைகளில் பூசணிக்காய் உடைத்து விபத்து ஏற்பட்டால் அதற்கு காரணமானோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com