\
15 ஆண்டுகால வாகனங்கள் காலாவதி அறிவிப்பால் அச்சம்: விஷமருந்திய ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

15 ஆண்டுகால வாகனங்கள் காலாவதி அறிவிப்பால் அச்சம்: விஷமருந்திய ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

15 ஆண்டுகால வாகனங்கள் காலாவதி அறிவிப்பால் அச்சம்: விஷமருந்திய ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
Published on

15 ஆண்டுகாலம் நிறைவடைந்த வாகனங்கள் அனைத்தும் காலாவதி என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மனமுடைந்த சேலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய நிதி நிலை அறிக்கையில், 15 ஆண்டுகால சரக்கு மற்றும் பயணியர் வாகனங்கள் அனைத்தும் காலாவதியானதாக அறிவிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அறிந்த சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் என்ற ஆட்டோ ஓட்டுநர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி அவர் நஞ்சருந்தியுள்ளார். இதையறிந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் சரவணன் இன்று காலை உயிரிழந்தார். இதனடிப்படையில் சரவணன் குடும்பத்தினர் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com