\
பாரதியார் நினைவு நூற்றாண்டு சிறப்புத்தொடரை ஒலிபரப்பும் சென்னை வானொலி!

பாரதியார் நினைவு நூற்றாண்டு சிறப்புத்தொடரை ஒலிபரப்பும் சென்னை வானொலி!

பாரதியார் நினைவு நூற்றாண்டு சிறப்புத்தொடரை ஒலிபரப்பும் சென்னை வானொலி!
Published on

சென்னை வானொலி நிலையம், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்  நினைவு நூற்றாண்டை நினைவு கூறும் வகையில், “பாரதிதொடர்” என்னும் சிறப்புத்தொடரை 28/08/2021 முதல் பாரதியாரின் 100வது நினைவு நாளான 11/09/2021 வரை ஒலிபரப்புகின்றது.

பாரதியின் வரிகள், சொற்றொடர்களில் தங்களைக் கவர்ந்த ஒரு தொடர் குறித்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவர் பேசுகிறார்கள். பேராசிரியர் பாரதிபுத்திரன், மூத்த பத்திரிகையாளர் மாலன், சூழலியல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com