போக்சோவில் சிக்கியவரைப் பிடிக்கச் சென்ற காவலர்கள்; அரிவாளால் வெட்டிய குற்றவாளி

போக்சோ வழக்கில் குற்றவாளியைப் பிடிக்க முயன்ற 3 காவலர்கள் தாக்கப்பட்டதில், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே போக்சோ வழக்கில் குற்றவாளியை பிடிக்கச் சென்ற 3 காவலர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ஆனந்தநகர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவர், போக்சோ வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்தார். அதன்பின் நீதிமன்ற உத்தரவுபடி முறையாக நேரில் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனால், அசோக்குமாரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிடித்தது. அவரை பிடிக்க சாயல்குடி காவல்நிலையத்திலிருந்து 3 காவலர்கள் சென்றுள்ளனர். அப்போது, தன்னை பிடிக்க வந்த காவலர்களை அசோக்குமார் அரிவாளால் வெட்டியுள்ளார். அதில், காளீஸ்வரன் என்ற காவலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட அசோக்குமாரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com