ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான புதிய முடிவை திரும்பப்பெற முதல்வர் பழனிசாமி கடிதம்
ஹைட்ரோகார்பன் திட்டம் சம்பந்தமான மத்திய அரசின் புதிய முடிவை திரும்பப் பெறவேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை முறையாக பெற வேண்டும். அதேநேரத்தில் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது இதுவரை இருந்து வந்த விதிமுறை.
ஆனால் இதற்கு மாறாக சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006-இல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இதன்படி ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு இனி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற வேண்டியது கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு விவசாயிகள் மத்தியிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இதனிடையே தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுத்து,
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தப் பிரச்னை சம்பந்தமாக பிரதமர் மோடிக்கும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் மக்களின் கருத்தை கேட்கத் தேவையில்லை என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் டெல்டா பகுதி மக்களின் கருத்துகளை கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.