பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலையா?

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருவதையடுத்து இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை ராமேஸ்வரம் வர இருப்பதையடுத்து பிரதமரின் அலுவலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைகளில் உள்ள நாகை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 40 தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக கொழும்பில் உள்ள தூதரக அதிகாரிகள் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

boat
boatfile

இன்று பகல் சுமார் 10 மணியளவில் இந்திய தூதரக வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஆஜராகி சிறையில் உள்ள 40 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய மனு செய்ய இருப்பதாகவும், அதன் அடிப்படையில் இன்று பிற்பகலுக்குள் இலங்கைச் சிறையில் உள்ள அனைத்து மீனவர்களும் விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com