“என் மண் என் மக்கள்“ நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்க, இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி!

இன்று தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண்... என் மக்கள்“ யாத்திரை நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்கிறார்.
 பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடிகோப்புப்படம்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, திருப்பூர் மாவட்டம் மாதப்பூரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண்... என் மக்கள்“ யாத்திரை நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்கிறார்.

இன்று பிற்பகல் 2.06 மணிக்கு கோவை சூலூருக்கு வருகிறார். அங்கிருந்து 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் சென்றடைகிறார். பின்னர் 2.45 மணிக்கு மாதப்பூரில் நடைபெறும் ‘என் மண்... என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அவருக்காக தாமரை வடிவில் மேடை அமைக்கப்பட்டு, ஐந்து லட்சம் பேர் அமரக்கூடிய வகையில், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 பிரதமர் நரேந்திர மோடி
வயநாடு to ரேபரேலி: தொகுதி மாறுகிறாரா ராகுல் காந்தி?

ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பிற்பகல் 3.50 மணியளவில் பல்லடத்தில் இருந்து புறப்படும் பிரதமர், மாலை 5.05 மணிக்கு மதுரையை சென்றடைகிறார். மாலை 5.15 மணிக்கு மதுரை டிவிஎஸ் லட்சுமி பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார்.

இந்நிகழ்ச்சி முடிந்த பின் சாலை வழியாக மாலை 6.45 மணிக்கு மதுரை பசுமலையிலுள்ள தனியார் விடுதிக்குச் சென்று ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதையடுத்து, நாளை காலை 8.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வெளி துறைமுக சரக்கு பெட்டக முனையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com