\
தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்க நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி

தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்க நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி

தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்க நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி
Published on

தினத்தந்தி நாளிதழின் பவளவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்.

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறும் விழாவில் பங்கேற்று விழா மலரை வெளியிடுவதுடன் பிரதமர் மோடி சிறப்புரையும் நிகழ்த்துகிறார். இதற்காக டெல்லியில் இருந்து சென்னை விமானநிலையம் வரும் மோடி, அங்கிருந்து சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஐஎன்எஸ் அடையாறு விமானப்படை தளத்திற்கு ஹெலிகாப்டரில் வருகிறார். அந்த இடத்தில் இருந்து கார் மூலம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு மோடி செல்கிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் பங்கேற்ற பிறகு பிரதமர் அலுவலக இணைச்செயலாளர் டி.வி.சோமநாதனின் இல்லத் திருமண விழாவில் மோடி பங்கேற்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com