தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகிறார் பிரதமர் மோடி.. 4 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

The Elephant Whisperers ஆவணப்படத்தில் இடம்பெற்ற குட்டி யானைகளையும், பொம்மன் - பெள்ளி தம்பதியையும் நேரில் பார்க்க பிரதமர் மோடி வரும் 9ஆம் தேதி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வருகிறார்.
Modi - Theppakadu elephant camp
Modi - Theppakadu elephant camp Modi(file pic), Maheswaran

தெப்பக்காடு பகுதிக்கு பிரதமர் மோடி வருவதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக, சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தங்கும் விடுதிகளும், உணவுகளும் மூடப்படும் எனவும் வனத்துறை அறிவித்திருக்கிறது.

ஆஸ்கர் விருது பெற்ற The Elephant Whisperers ஆவணப்படத்தில் இடம்பெற்ற குட்டி யானைகளையும், பொம்மன் - பெள்ளி தம்பதியையும் நேரில் பார்க்க பிரதமர் மோடி வரும் 9ஆம் தேதி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வருகிறார். அதற்காக தெப்பக்காடு பகுதியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

9ஆம் தேதி சாலை மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 9.30 மணி அளவில் மசினகுடி வரும் பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகிறார்.

Theppakadu elephant camp
Theppakadu elephant campMaheswaran

பிரதமர் மோடி வருகையை ஒட்டி தெப்பக்காடு பகுதியில் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் 06-04-2023 முதல் 09-04-2023 ஆம் தேதி வரை முதுமலையில் உள்ள அனைத்து ஓய்வு விடுதிகள், துயிலகங்கள், உணவகம், சிற்றுண்டியகம் மூடப்படுகிறது. மேலும் வன விலங்குகளை காணுவதற்கான வாகன சவாரியும் 07-04-2023 முதல் 09-04-2023 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com