சென்னைக்கு நாளை வருகிறார் பிரதமர் மோடி

சென்னைக்கு நாளை வருகிறார் பிரதமர் மோடி
சென்னைக்கு நாளை வருகிறார் பிரதமர் மோடி

சென்னை ஐஐடியின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நாளை சென்னை வருகிறார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் அவர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், விழா நடைபெறும் கிண்டி ஐஐடி வளாகத்துக்கு காலை 9.15 மணிக்கு மோடி வருகிறார். இந்தியா-சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் பிரதமர், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கான கண்காட்சியையும் பார்வையிடுகிறார். 

இதனைத் தொடர்ந்து 11.40 மணிக்கு சென்னை ஐஐடியின் 56ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர் களுக்கு பட்டங்களை வழங்கி, சிறப்புரையாற்றுகிறார். பிறகு பிற்பகல் 12.45 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com