கேமரா குறித்து பேசி சிரிப்பலையை ஏற்படுத்திய பிரதமர் மோடி

கேமரா குறித்து பேசி சிரிப்பலையை ஏற்படுத்திய பிரதமர் மோடி

கேமரா குறித்து பேசி சிரிப்பலையை ஏற்படுத்திய பிரதமர் மோடி
Published on

கேமரா குறித்து பேசி ஐஐடியில் பிரதமர் மோடி சிரிப்பலையை ஏற்படுத்தினார்

ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை பிரதமர் மோடி சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பிரதமருக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். பின்னர் மோடிக்கு பாஜக சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி, ஹெலிகாப்டர் மூலம் சென்னை ஐஐடி சென்றார். அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்,  இந்தியா - சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய மோடி தமிழர்களின் உணவு குறித்தும், விருந்தோம்பல் குறித்தும் பேசினார்.

 பின்னர் ஹேக்கத்தான் குறித்து பேசிய அவர், ஹேக்கத்தான் என்பது இளம்தலைமுறையினரின் அறிவுத்திறனை வளர்க்கக்கூடியது. ஹேக்கத்தான் வெற்றிக்கு உதவிய சிங்கப்பூர் கல்வி அமைச்சருக்கு நன்றி என தெரிவித்தார்.

மேலும் இந்த ஹேக்கத்தான் மூலம், ஒரு புதிய கேமிராவை, கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், கூட்டத்தில் யார் யார் பேச்சை கவனிக்கிறார்கள் என கண்டுபிடிக்க முடியும் . இந்த கேமராவை நான், நாடாளுமன்றத்தில் பொறுத்தலாம் என சபாநாயகரிடம் வலியுறுத்துவேன் என நகைச்சுவையாக தெரிவித்தார். இதனைக் கேட்டதும் அரங்கம் முழுவதும் சிரிப்பலை எழுந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com