\
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வரலாறு காணாத அளவில் நிதியை ஒதுக்கியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பேசிய பிரதமர் மோடி, ”தமிழகத்தின் வளர்ச்சிக்காக வரலாறு காணாத நிதியை ஒதுக்கி வருகிறோம். 2014-க்கு முன் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ.30 லட்சம் கோடியை தந்தது; ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் ரூ.120 லட்சம் கோடியை தந்துள்ளோம்.
2014-க்கு முன் தமிழகம் பெற்ற நிதியை விட கடந்த 10 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு கூடுதல் நிதி அளித்துள்ளோம். நெடுஞ்சாலைத்துறைக்கும் ரயில்வே துறைக்கும் 3 மடங்கு அதிக நிதியை தமிழகத்திற்கு அளித்துள்ளோம். ஏழைகள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெறவும் இலவச மருத்துவ சிகிச்சைக்கும் பெரும் தொகையை அளிக்கிறோம்” என்றார்.
இதுகுறித்த செய்தியை அறிய, இந்த வீடியோவைப் பார்க்கவும்.