எய்ம்ஸ் மருத்துவனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி !
தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ. 1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இன்று அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழகத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு கடந்தாண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பணிகளை தொடங்க பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் அடிக்கல் நாட்டு விழாவில் ஆளுநர் பன்வரிவால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மற்றும் மாநில அமைச்சர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ. 1264 கோடியில் செலவில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை அடுத்த 45 மாதங்களில் முழுமையான பயன்பாட்டிற்கு வரும் என ஏதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை ஆளுநர் பன்வரிவால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.இராதகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளவுந்தராஜன் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.