விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி!

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட தியானம் இன்று பிற்பகல் முடிவடைந்தது.

கன்னியாகுமரிக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முக்கடலில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு கடந்த மே 30 ஆம் தேதி சென்றார். மே 30ம் தேதி மாலை தியானத்தை தொடங்கிய பிரதமர், 3 ஆவது நாளாக இன்றும் தியானத்தை தொடர்ந்தார். காவி உடையில் கையில் ருத்ராட்சம், நெற்றியில் விபூதி இட்டு பிரதமர் மோடி தியானம் செய்தார்.

பிரதமர் மோடி தியானம்
பிரதமர் மோடி தியானம்ட்விட்டர்

இன்று காலை விவேகானந்தர் பாறையில் நின்று சூரிய வணக்கம் செய்தார். அதற்காக, கிழக்கு முகமாக நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி, சூரிய உதயக் காட்சியை எழுந்து நின்று வணங்கினார். சூரிய உதயத்தின் போது காவி உடை அணிந்திருந்த பிரதமர் மோடி, பின்னர் மண்டபத்திற்கு சென்று தியானத்தைத் தொடர்ந்தார்.

விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று காலை 11 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மண்டபத்திற்குள் தியானம் செய்ய நேற்று அனுமதி வழங்காத நிலையில் இன்று பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் சற்று முன்புமாக பிற்பகல் 3 மணியளவில் தனது தியானத்தை மோடி நிறைவு செய்தார். கிட்டத்தட்ட 45 மணி நேரத்திற்கான தியானத்தை பிரதமர் மோடி நிறைவு செய்தார். விவேகானந்தர் மண்டபம் அருகே இருக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் சிலையை பார்வையிட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com