\
இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
Published on

கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில் ‌அமைக்கப்ப‌ட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை திறக்க பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார்.‌

தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வருகிறார். வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை அவர் திறந்து வைக்கிறார். விழாவில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தராராஜே சிந்தியா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்‌.‌ பிரதமரின் வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com