"பாஜக நேசிக்கிறது; திமுக, காங்கிரஸ் வஞ்சிக்கிறது" - பிரதமர் மோடி பேச்சு

2024-ல் 5-ஆவது முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருந்தார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்pt web

மக்களவை தேர்தல் நெருங்குவதை ஒட்டி, 2024-ம் ஆண்டில் மட்டும் 5-ஆவது முறையாக தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தந்தார் பிரதமர் மோடி. தென்மாவட்டமான கன்னியாகுமரியில் விவேகானந்தர் கலைக் கல்லூரிக்கு சென்ற பிரதமர், அங்கு 70,000 பேர் பங்கேற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் திமுக குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். துறைமுகம் வளர்ந்தால்தான் ஒரு நாடு வளரும். ஆகவே நாங்கள் தமிழ்நாட்டின் கட்டமைப்பினை வளர்த்து கொண்டிருக்கிறோம். கன்னியாகுமரி - திருவனந்தபுரம் சிறப்பு வழித்தடத்தை பாஜக அரசு செயல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் I.N.D.I.A கூட்டணி ஈடுபடாது, திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம்.

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்pt web

நவீன மீன்பிடி படகுகளுக்கு நிதி உதவி வழங்குவது என்று மீனவ மக்களின் கவலையை மீட்கும் முயற்சியை பாஜக முன்னெடுத்து வருகிறது. தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை பாஜக அரசு புதுப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் சாலை, ரயில் போக்குவரத்தினை மேம்படுத்த பெரிய திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 50,000 கோடி நெடுஞ்சாலைகள் நிறைவடைந்துவிட்டன. சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

2009, 2014 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் காங்கிரஸ், திமுக ஆட்சி நடத்தப்பட்டு வந்தபோது ரயில்வே பணிக்காக கொடுக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ஆண்டுக்கு எண்ணூறு கோடி கூட இல்லை.

ஆனால் பாஜக ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட பணம் 6,300 கோடி ரூபாய். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடியில் ரயில்வே திட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிற்கு திமுக ஒரு அரக்கானாக இருக்கிறது. திமுக, தமிழ்நாட்டின் தமிழ் பண்பாட்டின் எதிரி. அதுவும் சாதரண எதிரி அல்ல, நமது கடந்த கால பெருமைகளையும், பாரம்பரியத்தினையும் கண்மூடித்தனமாக எதிர்க்கின்ற எதிரி.

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்
’இனிமேல் உங்களிடம் நான் தமிழ் மொழியில் பேசப் போகிறேன்’ - பிரதமர் மோடி

அயோத்தி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் தமிழ்நாட்டில் உள்ள பிர்சித்தி பெற்ற கோவில்களுக்கு நான் வருகை தந்திருந்தேன். ஆனால், திமுக என்ன செய்தது? திமுக அரசால், அயோத்தியில் நடைப்பெற்ற பிராண பிரிதிஷ்டையை காணொளியில் பார்பதற்கு கூட தமிழக மக்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.

சனாதானத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு உச்சநீதிமன்றமே கண்டனத்தை தெரிவித்திருந்தது. திமுக - காங்கிரஸ் கூட்டணியால் தமிழக மக்களுக்கு நஷ்டம்தான். நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை கூட திமுக புறக்கணித்துள்ளது. ஜல்லிக்கட்டு கொண்டாட ஏற்பாடு செய்தது பாஜக அரசுதான். இதுபோல தமிழ்நாட்டின் எந்த பாரம்பரியம் மிக்க சிறப்பு அம்சம்களையும் மோடியாகிய நான் இருக்கும்வரை யாராலும் அசைக்க முடியாது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com