சென்னை: அரசுப் பேருந்து மோதி +2 மாணவி உயிரிழப்பு; தப்பி ஓடிய டிரைவர்

சென்னை: அரசுப் பேருந்து மோதி +2 மாணவி உயிரிழப்பு; தப்பி ஓடிய டிரைவர்

சென்னை: அரசுப் பேருந்து மோதி +2 மாணவி உயிரிழப்பு; தப்பி ஓடிய டிரைவர்
Published on

தனியார் பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பியபோது மாநகரப் பேருந்து மோதி 12-ம் வகுப்பு மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், ராஜேந்திர பிரசாத் சாலையில் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி லட்சுமி ஸ்ரீ(17), மாநகரப் பேருந்து மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குரோம்பேட்டையில் உள்ள பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடி விட்டு வீடு திரும்பியபோது, பொழிச்சலூரிலிருந்து அஸ்தினாபுரம் சென்ற தடம் எண் 52H என்ற அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இதனைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com