ப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

ப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
ப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

ப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. 

2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்வெழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தங்களது முடிவுகளை மாணவ மாணவிகள் http:/www.tnresults.nic.in, http:/www.dge1.tn.nic.inhttp:/www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம். இதுதவிர, தாங்கள் பயின்ற பள்ளிகளில் வழியாக பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். 

அதேபோல், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு முடிவுகள் அனுப்பப்படும். ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த மாதம் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை,  http:/www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களாகவும் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

+2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. 2019 மார்ச் மாதம் நடத்தப்பட்ட பொதுத் தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com