தமிழ்நாடு
குரங்கு கூட்டத்திலிருந்து கிராமத்தை காப்பாற்றக்கோரி மனு..!
குரங்கு கூட்டத்திலிருந்து கிராமத்தை காப்பாற்றக்கோரி மனு..!
குரங்கு கூட்டத்திலிருந்து கிராமத்தை காப்பாற்றக்கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் வடகால் கிராமத்தை சேர்ந்த மக்கள் தஞ்சாவூர் ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் குரங்கு கூட்டதை கிராமத்திலிருந்து விரட்டக் கோரி ஏற்கனவே ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்ததாகவும், அதில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக வேறு எங்கு சென்று முறையீடு செய்வது என்றும் தங்களுக்கு தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ள கிராம மக்கள், குரங்கு கூட்டத்தை அப்புறப்படுத்தி தந்தால் கால முழுவதும் நன்றிக் கடனுடம் இருப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.