\
முட்டை பப்ஸில் பிளாஸ்டிக்: வாடிக்கையாளர் பகீர்

முட்டை பப்ஸில் பிளாஸ்டிக்: வாடிக்கையாளர் பகீர்

முட்டை பப்ஸில் பிளாஸ்டிக்: வாடிக்கையாளர் பகீர்
Published on

திருச்செங்கோட்டில் தனியார் இனிப்பகத்தில் வாங்கிய முட்டை பப்ஸில் பிளாஸ்டிக் துண்டு இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எஸ்என்டி ரோட்டில் தனியார் இனிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு செங்கோடம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் முட்டை பப்ஸ் (EGG Puffs) வாங்கியுள்ளார். அதை சாப்பிடும் போது அதில் பிளாஸ்டிக் துண்டுகள் இருந்தாக தெரிகிறது. இதுதொடர்பாக திருச்செங்கோடு நகர காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சம்பத்தப்பட்ட கடைக்கு சென்ற காவலர்கள் அங்கிருந்த முட்டைகள் மற்றும் பப்ஸ்களை பறிமுதல் செய்தனர். சம்பத்தப்பட்ட கடை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com