பிளாஸ்டிக் அரிசி விற்றால் கிரிமினல் நடவடிக்கை: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை

பிளாஸ்டிக் அரிசி விற்றால் கிரிமினல் நடவடிக்கை: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை
பிளாஸ்டிக் அரிசி விற்றால் கிரிமினல் நடவடிக்கை: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை


பிளாஸ்டிக் அரிசியை விற்பனை செய்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


பிளாஸ்டிக் அரிசி என சந்தேகம் இருந்தால் அதுகுறித்து 94440 42322 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முன்னதாக சென்னை அயனாவரம் மாநகரப் பேருந்து பணிமனையில் உள்ள உணவகத்தில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி புழக்கத்தில் வந்துவிடுமோ என்ற கவலை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதனை போக்கும் வகையில், நெல்லையில் 30க்கும் மேற்பட்ட அரிசி கடைகளில் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சோதனையில் பிளாஸ்டிக் அரிசி ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

பிளாஸ்டிக் அரிசி தமிழகத்தில் இல்லை என்றாலும், மக்கள் தங்கள் அச்சத்தைப்போக்கிக்கொள்ள எளிய முறையில் சோதனை செய்துக்கொள்ளலாம் என உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை என்ற பேச்சுக்கே இடமில்லை என உணவுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com