பிளாஸ்டிக் முட்டை... மீண்டும் அச்சத்தில் மக்கள்!
பிளாஸ்டிக் முட்டை என்பது இன்றளவும் வதந்தி என்ற அளவிலேயே இருக்கிறது. ஆனால், ஆங்காங்கே பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுவதாக புகார்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜான் என்பவர், நேற்று அதே பகுதியில் உள்ள கடை ஒன்றில் பதினைந்து நாட்டு முட்டைகளை வாங்கியுள்ளார். இன்று காலை குழந்தைகளுக்கு சாப்பாடு கட்டிக்கொடுக்க முட்டையை வேகவைத்தபோது ஒரு முட்டையின் மஞ்சள் கரு மட்டும் பிளாஸ்டிக் போல இருந்தது.
முட்டையின் வாசனையின்றி இருந்த அந்த முட்டையை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜான், கடைக்கு சென்று கேட்டுள்ளார். வழக்கமாக அளிக்கும் வியாபாரியே முட்டையை விற்றதாக கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து மீதியிருந்த முட்டைகளை வீட்டில் வைத்து வேகவைத்து பார்த்தபோது, ஒரு சில முட்டைகள் பிளாஸ்டிக் தன்மையுடன் இருந்ததாக அவர் சந்தேகம் தெரிவித்தள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில், வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.