அதிகரிக்கும் பிளாஸ்டிக் கப் இட்லி: புற்றுநோய் ஏற்படும் அபாயம்

அதிகரிக்கும் பிளாஸ்டிக் கப் இட்லி: புற்றுநோய் ஏற்படும் அபாயம்

அதிகரிக்கும் பிளாஸ்டிக் கப் இட்லி: புற்றுநோய் ஏற்படும் அபாயம்
Published on

பிளாஸ்டிக் கப் பயன்படுத்தி இட்லி தயாரிக்கும் முறை தமிழகத்தில் சமீபமாக அதிகரித்து வருகிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணங்கள் போன்ற விஷேசங்களில் அதிகமாக பகிரப்படும் உணவுப் பதார்த்தங்களில் முக்கிய இடம் பிடிப்பது இட்லி. எண்ணெய் உபயோகமின்றி நீராவியில் வேகவைத்து தயாரிக்கப்படும் இட்லியை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் சமீப காலமாக இட்லி தட்டில் துணிக்கு பதிலாக, பிளாஸ்டிக் கப்பை பயன்படுத்துவது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

இது போன்ற சமையல் முறைகளால் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் எனக்கூறும் இரைப்பை குடல் நிபுணர் அருண் செல்வன், அடிக்கடி இந்த முறையில் சமைக்கப்படும் உணவுகளை உண்பதால், கொதிநிலையில் பிளாஸ்டிக்குடன் உணவுகள் வேதியியல் மாற்றத்தில் கலக்க அதிக வாய்ப்புள்ளது. அதை உண்ணும் நபர்களுக்கு புற்று நோய் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிளாஸ்டிக் கப்பில் இட்லி சமைப்பது ஏன் என, அதுபோல சமையலில் ஈடுபடும் சமையல்காரர்களிடம் கேட்டபோது, உளுந்து, அரிசி என எது அதிகமானாலும் துணியில் சமைக்கும்போது இட்லி ஒட்டிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதனால் கூட்ட காலத்தில் எளிமையாக சமைக்க முடியாத நிலை ஏற்படும். இதுபோல பிளாஸ்டிக் கப்பில் சமைப்பதால் எளிமையாக இட்லியை வேக வைத்து எடுக்க முடியும். உரிய நேரத்தில் பரிமாற முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com