\
மாமல்லபுரத்தில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்

மாமல்லபுரத்தில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்

மாமல்லபுரத்தில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்
Published on

மாமல்லபுரத்தில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக கைத்தறித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் மற்றும் கைத்திறனை பாதுகாக்கும் வகையில் 5 கோடி ரூபாய் செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்திருந்தார். அதன்படி, கைத்தறித்துறை வல்லுநர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு மாமல்லபுரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com