அதிமுக தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பினர் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க, ஓபிஎஸ் அணி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் அணியும், சசிகலா தரப்பு அணியும் உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை நாடின. இதனையடுத்து இரட்டை இலை சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இடைத்தேர்தலில் அதிமுகவின் கட்சி பெயரையோ, சின்னத்தையோ சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்புமே பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக-வின் தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பு பயன்படுத்த ஓபிஎஸ் அணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி மனு அளிக்கவும் ஓபிஎஸ் அணி முடிவு செய்துள்ளது. அதிமுக-வின் தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பினர் இப்போது பயன்படுத்தி வருகின்றனர்.