அணு உலையை எதிர்த்தால் மின்சாரம் கிடையாது: பியூஸ் கோயல்

அணு உலையை எதிர்த்தால் மின்சாரம் கிடையாது: பியூஸ் கோயல்

அணு உலையை எதிர்த்தால் மின்சாரம் கிடையாது: பியூஸ் கோயல்
Published on

அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க வாய்ப்பில்லை என்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எண்ணூர் துறைமுகம் தனியார் மயமாக்கப்படாது. செய்யூர் நிலக்கரி சுரங்கத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். ஜிஎஸ்டி அமலானதால் நிலக்கரி கொள்முதல் விலை குறைந்துள்ளதால், நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி செலவும் குறைந்துள்ளது. சூரிய ஒளி மின்சாரம் மூலம் விவசாய மின் மோட்டார் பம்புகளை இயக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் தொடர்பான தமிழக அரசின் திட்ட பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கும் என கூறினார். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் 2,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்குக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதே சமயத்தில் அணுஉலை மின்சாரத்தை கொடுப்பதில் மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறினார். அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் பியூஸ் கோயல் கூறினார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com