\
 வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

 வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

 வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

பரமக்குடி அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்த சோமசுந்தரம், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் ராமநாதபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அரியனேந்தல் அருகே மதுரையை நோக்கி அதிவேகமாக வந்த அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணித்த சோமசுந்தரத்தின் குடும்ப உறுப்பினர் மணிமேகலை, ரஞ்சனி, ராமநாதபுரம் முதுநாள் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுனர் செல்வகுமார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரின் இடிபாடுகளில் சிக்கிய மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வளைகாப்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து பரமக்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com