\
விடுமுறை நாளில் லேத் பட்டறையில் வேலை செய்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

விடுமுறை நாளில் லேத் பட்டறையில் வேலை செய்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

விடுமுறை நாளில் லேத் பட்டறையில் வேலை செய்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

ஈரோடு அருகே லேத் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி கந்தசாமி பாளையத்தைச் சேர்ந்தவர் தூய்மை பணியாளர் ரவி. இவரது மகன் ஹரி சங்கர் (17) தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை என்பதால் மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான லேத் பட்டறையில் பணிக்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஹரி சங்கர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகிரி போலீசார், மாணவனின் உடலை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com