கருக்கலைப்பு செய்துகொண்ட பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் - உறவினர்கள் சாலைமறியல்

கருக்கலைப்பு செய்துகொண்ட பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் - உறவினர்கள் சாலைமறியல்
கருக்கலைப்பு செய்துகொண்ட பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் - உறவினர்கள் சாலைமறியல்

தியாகதுருகம் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கூவாடு கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி என்பவரின் மனைவி பெரியநாயகம், இவருக்கு வேணுகோபால், ஐயப்பன் ஆகிய இரண்டு மகன்களும், மஞ்சமாதா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் பெரியநாயகம் கர்ப்பமுற்ற நிலையில், கருக்கலைப்பு செய்வதற்காக நேற்று தியாகதுருகம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு கருக் கலைப்பு செய்யப்பட்டதாகவும் இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி பெரியநாயகம் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பெரிய நாயகத்தின் உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நள்ளிரவில் மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த கள்ளக்குறிச்சி கூடுதல் எஸ்.பி ஜவஹர்லால் தலைமையில் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து பெரியநாயகத்தின் உறவினர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சாலை மறிமலை கைவிட்டு கலைத்து சென்றனர். தொடர்ந்து பெரியநாயகியின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு வந்த பெண் உயிரிழந்த சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com