\
இரவுப் பணி முடித்து டூ வீலரில் வீடு திரும்பிய பெண் தலைமை காவலருக்கு நேர்ந்த பரிதாபம்

இரவுப் பணி முடித்து டூ வீலரில் வீடு திரும்பிய பெண் தலைமை காவலருக்கு நேர்ந்த பரிதாபம்

இரவுப் பணி முடித்து டூ வீலரில் வீடு திரும்பிய பெண் தலைமை காவலருக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

மார்த்தாண்டம் பகுதியில் நடந்த வாகன விபத்தில் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியதாக வாகன ஓட்டுனரை மார்த்தாண்டம் போலீசார் கைது செய்துள்ளனர்.

குமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் கிறிஸ்ட்டல் பாய் (46). இவர் நேற்றிரவு காவல் நிலையத்தில் பணியாற்றிய பின்பு இன்று காலை அவரது சொந்த ஊரான கிராத்தூரை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் மார்த்தாண்டம் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது வில்லியம் மருத்துவமனை முன்பு, இவர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பள்ளிக்குச் சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த தலைமை காவலரை அப்பகுதியில் நின்ற மக்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கொனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மார்த்தாண்டம் போலீசார், விபத்தை ஏற்ப்படுத்திய வாகனத்தின் ஓட்டுனர் பாபு (49) என்பரை கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com