பள்ளி விடுமுறை காரணமாக உறவினர் வீட்டுக்கு வந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்
கொடைரோடு அருகே விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு வந்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா ஓரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது மகன் மணியரசன், ஐந்தாம் வகுப்பு படித்து வந்த இவர், பள்ளி விடுமுறைக்காக திண்டுக்கல் மாவட்டம் அழகம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மணியரசன் தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த போது நீண்ட தூரத்தில் இருக்கும் மின் கம்பத்தில் இருந்து வீட்டு மின் இணைப்புக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு குழாயை பிடித்துள்ளார். அப்போது மின் குழாயில் கசிந்து கொண்டிருந்த மின்சாரம் பாய்ந்ததில் மதியரசன் தூக்கி வீசப்படடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மையநாயக்கனூர் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு வந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.