பிங்க் ஆட்டோமுகநூல்
தமிழ்நாடு
விரைவில்... தமிழ்நாட்டில் அறிமுகமாகிறது பிங்க் ஆட்டோ திட்டம்!
பெண்களே இயக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. 10ஆம் வகுப்பு முடித்து ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் பிங்க் ஆட்டோக்களை இயக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிங்க் ஆட்டோ திட்டம், அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களே இயக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. 10ஆம் வகுப்பு முடித்து ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் பிங்க் ஆட்டோக்களை இயக்கலாம் என்றும், இதற்காக போக்குவரத்து துறையின் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோவில் ஜிபிஎஸ் வசதி மற்றும் வாகன கண்காணிப்பு சாதனம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பிங்க் ஆட்டோ அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும், முதலில் 250 ஆட்டோக்கள் மகளிர் மூலம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.