ராகுல் காந்தி - பினராயி விஜயன்
ராகுல் காந்தி - பினராயி விஜயன்web

கேரளா தேர்தல்| காங்கிரஸும், ராகுல் காந்தியும் பாஜகவின் B டீம்.. பினராயி விஜயன் விமர்சனம்!

ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பாஜகவின் பி டீம் போன்று செயல்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம் செய்துள்ளார்.
Published on
Summary

கேரள சட்டமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி பாஜகவின் B டீம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை பிடிக்க முயற்சிக்க, LDF 3வது முறையாக ஆட்சியை தொடர தீவிரமாக செயல்படுகிறது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி (யூனியன் பிரதேசம்) ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில், 140 சட்டசபை இடங்களைக் கொண்டிருக்கும் கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

kerala cm pinarayi vijayan on ugc draft regulations 2025
பினராயி விஜயன்x page

இந்த சூழலில் தான், கேரளாவில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிலான அரசாங்கம் நடைபெற்று வருகிறது. அங்கு எதிர்க்கட்சியாகவுள்ள காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. முதற்கட்டமாக காங்கிரஸ் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம். கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 நிதி உதவி. முதியோர் மற்றும் நலவாரிய ஓய்வூதியத் தொகை ரூ 3000 ஆக உயர்த்தப்படும், இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க 5 லட்சம் ரூபாய் கடனும் வழங்கப்படும் உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை கொடுத்துள்ளது.

மறுமுனையில் 2021இல் 99 இடங்களை வென்று ஆட்சியை பிடித்திருக்கும் இடது ஜனநாயக முன்னணி (LDF) 3வது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டுவரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தியை பாஜகவின் பி டீம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி - பினராயி விஜயன்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை நிறுத்திவைக்க வேண்டும்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

ராகுல் காந்தியை விமர்சித்த விஜயன்..

கேரளா சட்டமன்ற தேர்தலும் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸும் ராகுல் காந்தியும் பாஜகவின் B டீம் ஆக செயல்பட்டுவருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். பிடிஐ செய்திநிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார்.

kerala bjp extends support to renaming state to keralam
கேரள முதல்வர் பினராயி விஜயன்pt web

எதிர்க்கட்சிகள் ஆளும் எல்லா மாநிலங்களிலும் ஆளுங்கட்சி தலைவர்கள் சிக்கலில் உள்ளனர் என்றும் கேரளம் மட்டும் இதற்கு விதிவிலக்கு என ராகுல் காந்தி கூறியிருந்தார். அது குறித்த கேள்விக்கு பினராயி விஜயன் இவ்வாறு பதிலளித்தார். உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததில் இருந்து பல்வே றுவழிகளில் கேரளத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாகவும் பினராயிவிஜயன் குற்றஞ்சாட்டினார்.

ராகுல் காந்தி - பினராயி விஜயன்
புதுச்சேரியில் இரண்டு முறை ஆட்சி செய்த அதிமுக.. இம்முறை வெறும் 2 தொகுதிகளில் போட்டி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com