திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வோர் இரவு 10 மணிக்கு மேல் நடக்க தடை

திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வோர் இரவு 10 மணிக்கு மேல் நடக்க தடை
திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வோர் இரவு 10 மணிக்கு மேல் நடக்க தடை

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதால், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு 10 மணிக்கு மேல் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ் குமார் கூறியுள்ளார்.

நெல்லையில் கொரனோ விதிமுறைகளை மீறிய காரணத்துக்காக கடந்த ஒரு வாரத்தில் 5000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரனோ மூன்றாம் அலை மற்றும் ஓமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. மேலும் நாளை முதல் வெள்ளி சனி ஞாயிறுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவும் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், நெல்லை மாநகரில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர (கிழக்கு) துணை ஆணையர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்ரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “இன்று முதல் கொரனோ பரவல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதையொட்டி ஓட்டல்கள் திரையரங்குகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் கொரனோ தடுப்பு வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மருந்து கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். அதற்காக மருத்து சீட்டுகளை காட்டி தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஊரடங்கில் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வார இறுதியில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்து விஷயங்களுக்கும் பொதுமக்கள் அந்த நேரத்தில் வெளியே வருதை தவிர்க்க வேண்டும்.

பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் பொதுபக்கள் முன்னதாகவே தாங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். அதேபோல் இரவு ஊரடங்கு என்பதால் திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் முடிந்தளவு இரவு 10 மணிக்கு மேல் நேரத்தில் பாதயாத்திரை செல்வதை தவிர்த்து கொரனோ பரவலை தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கடந்த ஒருவாரமாகவே நெல்லை மாநகரில் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிவதை கண்காணித்து வருகிறோம் ஒரு வாரத்தில் விதியை மீறியோர் மீது 5000 வழக்குகள் போட்டுள்ளோம்.

அதன் மூலம் அதிகம் பேர் முக்ககவசம் அணிகின்றனர். இதனால் கொரனோ பரவல் குறையும். வணிக நிறுவனங்கள் சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட கொரனோ விதிமுறைவளை கடைபிடிக்க வேண்டும் இரவு 10 மணிக்கு  ஊரடங்கு தொடங்குவதால் அதற்கு முன்பாகவே வியாபாரிகள்  கடைகளை அடைக்க வேண்டும். இரவு 10 மணிக்கு பிறகு எந்தவித நகர்வும் இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com