அதிகரித்த சொத்து வரி - ரத்து செய்யக் கோரி மனு

அதிகரித்த சொத்து வரி - ரத்து செய்யக் கோரி மனு
அதிகரித்த சொத்து வரி - ரத்து செய்யக் கோரி மனு

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடியிருப்புகள் , வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் , குடியிருப்பு அல்லாத கட்டிங்களுக்கான சொத்துவரி 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது .  வரும் அக்டோபர் முதல் இது அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த வரி உயர்வு அறிவிப்பால் வாடகை வீட்டில் குடியிருப்போர் மிகவும் பாதிக்கப்படுவர் . எனவே  தற்போது உள்ள சூழலில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.  

மனுவில்,“தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் , 124 நகராட்சிகள் , 528 பேரூராட்சிகள் உள்ளன . இப்பகுதிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப சொத்து வரி , குடிநீர் வரி , கழிவுநீர் வரி ஆகியவை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக குப்பைக்கும் வரி வசூலிக்கப்படுகிறது. சொத்து வரி என்பது, குடியிருப் பின் அளவு (சதுர அடி அடிப்படை யில்), வழங்கப்பட்டிருக்கும் வசதி மற்றும் அமைவிடத்தை பொறுத்து விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டில் சொத்து வரி உயர்த்தப்பட் டது . மாநகராட்சிகள், நகராட்சிகள் , மூன்றாம் நிலை நகராட்சிகள் , பேரூராட்சிகளில் உள்ள சொத்து களுக்கான வரியை அப்போதைக்கு வழங்கப்பட்டிருந்த வசதிகள் ,  நிர்ணயிக்கப்பட்ட விதிகள் அடிப்படை யில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை மாற்றி அமைத்தது . அதன்பின் , கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத் துறையால் இந்த வரி மாற்றி அமைக்கப்படவில்லை” என கூறப்பட்டுள்ளது


மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி , ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் மாநகராட்சிகள் , நகராட்சிகள் , பேரூராட்சிகளில் சொத்து வரியை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் இதர மாநகராட்சிகளின் ஆணையர்கள், நகராட்சி நிர்வாக ஆணையர், பேரூ ராட்சிகள் இயக்குநர் ஆகியோரின் கடிதங்கள் அடிப்படையில், நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை மாற்றுவதற்கான பரிந்துரை அளிக்கப்பட்டது .
இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி களில் உள்ள குடியிருப்பு கட்டிடங் களுக்கான வரி தற்போதுள்ள அள வில் இருந்து கூடுதலாக 50 சதவீதத்துக்கு மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டிடங்கள், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கான வரி தற்போதுள்ள அளவில் இருந்து கூடுதலாக 100 சதவீதத்துக்கு மிகாமலும் வசூலிக்கப்படலாம் என்று அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, பரிந்துரையின் அடிப்படையிலான வரி வசூலிப்பை உறுதி செய்ததுடன், இந்த நிதியாண்டின் அடுத்த அரையாண்டில் இருந்து (அக்டோபர் முதல்) வரி உயர்வை அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான அரசாணையை கடந்த 19-ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில்,இந்த வரி உயர்வு அறிவிப்பால் வாடகை வீட்டில் குடியிருப்போர் மிகவும் பாதிக்கப்படுவர். எனவே  தற்போது உள்ள சூழலில்    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும்,  என சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com