மாற்றுத்திறனாளி லாக் அப் மரணம் : ஆய்வாளர் சஸ்பெண்ட்

மாற்றுத்திறனாளி லாக் அப் மரணம் : ஆய்வாளர் சஸ்பெண்ட்

மாற்றுத்திறனாளி லாக் அப் மரணம் : ஆய்வாளர் சஸ்பெண்ட்
Published on

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்தது தொடர்பாக சென்னை எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் குண‌சேகர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

2010ஆம் ஆண்டு முதல் ‌2016ஆம் ஆண்டு வரை தமிழகம் மற்றும் நாடுமுழுவதும் நடைபெற்றுள்ள ‌லாக் அப் மரணங்கள் குறித்து பார்க்கும்போது, தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரங்களின் படி 2010ஆம் ஆண்டு தமிழகத்தில் 2 பேரும் நாடு முழுவதும் 82 பேரும் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்துள்ளனர். 2011ல் தமிழகத்தில் 9 பேரும், நாடு முழுவதும் 123 பேரும் காவல்துறை விசாரணை நடத்திய போது உயிரிழந்திருக்கின்றனர். 

2012ஆம் ஆண்டு தமிழகத்தில் 11 பேரும், இந்தியா முழுவதும் 129 பேரும் காவலர்கள் கட்டுப்பாட்டில் இருந்த போது மரணமடைந்துள்ளனர். 2013-ல் தமிழகத்தில் 20 பேரும், இந்தியா முழுவதும் 133 பேரும் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்திருக்கின்றனர். 2014ஆம் ஆண்டு ‌தமிழ்நாட்டில் 7 பேரும், நாடு முழுவதும் 93 பேரும் காவல்துறை விசாரணையில் உயிரிழந்துள்ளனர். 2015-ல் தமிழகத்தில் 3 பேரும், நாடு முழுவதும் 97 பேரும் காவலர்கள் கட்டுப்பாட்டில் இருந்த போது மரணமடைந்துள்ளனர். 

2016ஆம் ஆண்டு தமிழகத்தில் 5 பேரும், இந்தியா முழுவதும் 92 பேரும் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்துள்ளனர். 2010 முதல் 2016ஆம் ஆண்டு வரை மொத்தமாக தமிழகத்தில்‌ 57 பேரும், நாடு முழுவதும் 749 பேரும் காவலர்கள் கட்டுப்பாட்டில் இருந்த போது மரணமடைந்துள்ளனர். அதேசமயம் விசாரணைக் கைதி உயிரிழந்தது தொடர்பாக 2010 முதல் 2016 ஆண்டு வரை நாடு முழுவதும் 4 காவலர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com