முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் வழங்க அரசு வேலையை ராஜினாமா செய்த உடற்கல்வி ஆசிரியர்

முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் வழங்க அரசு வேலையை ராஜினாமா செய்த உடற்கல்வி ஆசிரியர்

முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் வழங்க அரசு வேலையை ராஜினாமா செய்த உடற்கல்வி ஆசிரியர்
Published on

நாகையில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து அதில் வரும் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

நாகையை அடுத்துள்ள தெத்தி சமரசம் நகரில் வசித்து வருபவர் புத்தநேசன். இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள நெடுங்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கொரோனா அவலங்களையும், மக்கள் அல்லல்படும் நிலையையும், உயிரிழப்புகளையும் தொலைக்காட்சிகளில் தனது குடும்பத்தோடு பார்த்த ஆசிரியர் புத்தநேசன் தனது அரசு பணியை ராஜினாமா செய்து அதில் வரும் பிடித்த தொகைகளை முதல்வரின் கொரோனா நிவாரண நிதியாக வழங்க முடிவெடுத்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து தனது குடும்பத்தோடு நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரை சந்தித்த அவர், ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் கல்வித்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மக்கள்படும் இன்னல்களை கண்டு தனது மனைவி கோமதி, மகள் சுவாதியா ஆகியோரின் சம்மதத்தோடும், அரசுக்கு தாங்களும் எதாவது செய்யவேண்டும் என இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அரசு எனது ராஜினாமா கடிதத்தை ஏற்று பிடித்த தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடற்கல்வி ஆசிரியர் புத்தநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில் நாகையில் உடற்கல்வி ஆசிரியர் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து உதவ முன்வந்து இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com