மாற்றுத்திறனாளிகளை வழிமறித்து கைது செய்த காவல்துறை!

மாற்றுத்திறனாளிகளை வழிமறித்து கைது செய்த காவல்துறை!
மாற்றுத்திறனாளிகளை வழிமறித்து கைது செய்த காவல்துறை!

வேலை வழங்கக்கோரி, தலைமைச் செயலகம் நோக்கிச் சென்ற மாற்றுத்திறனாளிகளை, காவல்துறையினர் வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

சென்னை பூந்தமல்லியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள், தங்களுக்கு வேலை வழங்கக்கோரி முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து மனு அளிக்க புறப்பட்டனர். அவ்வாறு சென்றவர்களை, ஈக்காட்டுத்தாங்கல் கலைமகள் பேருந்து நிறுத்தம் அருகிலேயே தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். 

கடந்த ஒருவாரகாலமாகவே தங்களை இவ்வாறு கைது செய்து காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் யாரும் இல்லாத இடங்களில் காவல்துறையினர் இறக்கிவிட்டு வந்துவிடுவதாகவும், இதனால் கடும் சிரமத்தைச் சந்திக்க வேண்டியிருப்பதாகவும் மாற்றுத்திறனாளிகள் புகார் கூறியுள்ளனர். மேலும் தங்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிய வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com