கொடைக்கானல் தொடர் கனமழையால் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள்! கண்கவர் புகைப்படங்கள்

கொடைக்கானல் தொடர் கனமழையால் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள்! கண்கவர் புகைப்படங்கள்
கொடைக்கானல் தொடர்  கனமழையால் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள்! கண்கவர் புகைப்படங்கள்

கொடைக்கானலில் தொடர்ந்து பெய்யும் கன மழையால் அருவிகள் ஆர்பரித்து கொட்டுகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில், காலையில் வெப்பமான காலநிலையும், பிற்பகலுக்கு மேல் மேகமூட்டம் தாழ்ந்து, ஈரப்பதம் மிகுந்த குளிர் காலநிலை என, கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது.

மாலைப ;பொழுதிற்கு மேல், தாழ்ந்த மேகக் கூட்டங்கள் மழையாக மாறி, தொடர்ந்து நள்ளிரவு வரை விட்டு பெய்து வருகிறது. குளிர்ச்சி மிகுந்த மேல்மலைப் பகுதிகளில், சாரல் மழை முதல் மிதமான மழையும், வெப்பசலனம் மிகுந்த நடுமலை மற்றும் கீழ்மலைப ;பபகுதிகளில், கன மழையும் பெய்தது.

நடுமலையான நகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல், நள்ளிரவு வரை பெய்த தொடர் மழையால்; தோட்டக்கலை அலுவலகத்தில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது.

இதனால் மலைப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் பெருக்கெடுத்து, வெள்ளி நீர் வீழ்ச்சி பெரியாற்று ஓடை, உள்ளிட்ட ஆறுகளில், வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேல்மலைப் பகுதிகளில் உருளை, பூண்டு, காரட் உள்ளிட்ட பயிர்கள் விதைப்பிற்கு இம்மழை உதவும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com